8ல் செவ்வாய் இருப்பதனால் ஆயுளுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா?
ஆயுள் ஜோதிடம்: 8ல் செவ்வாய் |
8ல் செவ்வாய் இருந்தால் ஆயுளுக்கு பாதிப்பு என்பது ஜோதிடத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது (அல்லது) மூட நம்பிக்கை உள்ளது. முதலில் ஆயுளை ஜோதிடம் மூலம் கணக்கீடு செய்வோம்.
ஒரு ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது பூர்வ ஜென்ம கர்மாவினால் வரக்கூடிய பிரச்சினைகளை கூறும். அதாவது, ஒருவர் வாழும் காலத்தில் அந்த நபர் சந்திக்க வேண்டிய கஷடங்கள், எந்த மாதிரியான பிரச்சினைகள், எந்த காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும் மற்றும் அதன் பாதிப்பு எவ்வாறாக இருக்கும் என்பதனை குறிக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு மனிதன் தன்னுடைய கர்மாவினால் ஏற்படும் துன்பத்தினை அனுபவித்து முடிக்காமல், இந்த உலகத்தில் இருந்து போக முடியாது. அதாவது, 8ம் இடம் பலமாக இருந்தால் அதிக நாள் வாழ வேண்டும் (அதாவது, அதிக நாள் துன்பப்பட வேண்டும்).
இப்பொழுது 8ம் இடம் என்பது, ஒருவருடைய ஆயுள் பலத்தை குறிக்கும் (அதாவது) மரணத்தை குறிக்காது.
ஜோதிடத்தில், நீண்ட ஆயுள் உள்ளதா என்பதனை 8ம் இடத்தினை மட்டும் வைத்து சொல்ல முடியாது. ஒருவருக்கு ஆயுள் பற்றி அறிய, ஜாதகத்தில் உள்ள அனைத்து விபரங்களையும் ஆராய வேண்டும்.
- லக்கனம் மற்றும் லக்கின அதிபதி நிலைகள்
- உடல் நலம் பற்றிய விபரத்தினை அறிய 4ம் இடம் மற்றும் 4ம் இடது அதிபதி.
- உடலில் ஏற்படும் நோய்களை குறிக்கும் 6ம் இடம் மற்றும் 6ம் இடது அதிபதி.
- கர்மாவினால் ஏற்படும் துன்பங்கள் 8ம் இடம் மற்றும் 8ம் இடது அதிபதி.
- மரணத்தை குறிக்கும் 12ம் இடம் மற்றும் 12ம் இடது அதிபதி.
- மாரக கிரகங்களின் நிலைப்பாடுகள்.
- மாரக ஸ்தானத்தில் இருக்கும் கிரக நிலைகள்.
- பாதக ஸ்தானத்தில் இருக்கும் கிரக நிலைகள்.
- பாதக கிரகங்களின் நிலைப்பாடுகள்.
- மாரக மற்றும் பாதக கிரக நட்சத்திரத்தில் சாரத்தில் வரும் கிரகங்கள்
- துஷ்ட ஸ்தான அதிபதிகளின் நிலைப்பாடுகள்
- மாரக, பாதக மற்றும் துஷ்ட ஸ்தான அதிபதிகளின் தசை மற்றும் புத்தி காலங்கள்.
- கோச்சார ரீதியாக கிரக நிலைகள்.
- சனியின் காரகத்தன்மை மற்றும் அதன் நிலைப்பாடுகள்.
இத்தனை கிரக நிலைகளை ஆராயும் பொழுதுதான் ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார்? வாழ்க்கை எப்படி இருக்கும்? வாழ்க்கையில் எந்த விதமான துன்பங்கள் நேரும்? அந்த துன்பத்திலும் எந்த துன்பம் உயிருக்கு ஆபத்தாக முடியும்? அது எந்த காலகட்டத்தில் வரும்? என்று தெரிய வரும்.
மேலும், செவ்வாய் எட்டாம் இடத்தில இருந்தால், ஓவ்வொரு லக்கினத்திற்கும் ஒவ்வொரு பலன்களை கொடுக்கும். மேலும் செவ்வாய் எந்த கிரகத்தினை பார்க்கிறது (அல்லது) யாரோடு கூட்டு சேர்ந்து உள்ளது என்பதனை பொறுத்து பலன்கள் மாறுபடும். மேலும், செவ்வாய் எந்த நட்சத்திர சாரத்தில் செல்கிறது, மேலும், நட்சத்திர அதிபதி யார் அவர் எங்கு இருக்கிறார் என்று பார்க்கும் பொழுது, பல விதமான பலன்கள் உண்டாகும்.
எந்த கணக்கையும் பார்க்காமல், 8ம் இடத்தில செவ்வாய் இருந்து விட்டாலே, ஆயுள் குறையும் என்று கூறுவது தவறு. ஆக, ஜோதிடத்தில் உள்ள பல மூட நம்பிக்கைகளில் இதுவும் ஓன்று. ஒரு சரியான ஜோதிடரோ அல்லது ஜோதிட அறிவு உள்ளவரோ இந்த கருத்துகளை புறம் தள்ளுவார்.
-----------------------------------------------------------------------------------------------------
For personal readings: Please visit my blog page to fix an appointment Horoscope Readings (Services & Charges). தனிப்பட்ட ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்ஆப் எண் 9080017636
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ARIES - MESHA RASI Taurus - Rishaba Rasi Palan Gemini - Mithuna Rasi Cancer - Kataka Rasi Leo - Simha Rasi Virgo - Kanni Rasi Libra - Thula Rasi Scorpio - Viruchika Rasi Sagittarius - Dhanusu Rasi Capricorn - Makara Rasi Aquarius - Kumbha Rasi Pisces - Meena Rasi
Follow my Facebook Page to get latest Astrological Updates: Astro Guru
Read my blog on astrological articles Secrets of Horoscope
Follow me on Quora Medical Astrology & Vedic Astrology
Read my blog on Marriage Astrology Marriage Astrology
Blog on Shani & its impacts: Lord Saneeswara
Blog on Pariharam (remedial measures): Vedic Astrology Pariharam
Follow me on Quora
கருத்துகள்
கருத்துரையிடுக