தனுசு லக்னம் 7-ஆம் அதிபதி புதன், 8-ல் சூரியனுடன் இணைந்து உள்ளது, மணமகனுக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா? தனுசு லக்கினம்: கணவன் மாமியார் உறவு தனுசு லக்கினத்திற்கு புதன் 7ஆம் வீடு மற்றும் 10ஆம் வீட்டிற்கு அதிபதி ஆவார். 7ஆம் வீடு மாரக ஸ்தானம் ஆகும். 10ஆம் வீடு கெடுதலான ஸ்தானம் இல்லை. ஆக, புதன் தனுசு லக்கினத்திற்கு ஒரு பாதி நன்மை செய்பவராகவும் மறு பாதி தீமை செய்பவராகவும் இருப்பார். பாக்கியாதிபதி சூரியன் 9ஆம் வீட்டின் அதிபதி என்பதால் ஒரு முழு சுபர் ஆவார். ஆக, சுபரான சூரியனும் பாதி அசுபரான புதனும் 8ஆம் வீடு என்ற துர் ஸ்தானத்தில் மறைந்து உள்ளனர். பாதி அசுபரான புதன் கெடுதலான 8ஆம் வீட்டில் மறைவதால் தன்னுடைய கெடுதல் பலனை மேலும் அதிகம் ஆக்குவார். சுபரான சூரியன் தன்னுடைய சுப தன்மையை இழந்து விடுவார். சூரியன் மற்றும் புதன் தனுசு லக்கினத்திற்கு 8ஆம் வீட்டில் மறைவதால் கீழே கண்ட பிரச்சினைகள் எழலாம். ஜாதகரின் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். கணவன்/மனைவி மற்றும் மாமியாருடன் உறவுகள் பின்னடைவை சந்திக்கும் அல்லது கணவன்/மனைவி மற்றும் மாமியார் சிரமத்தினை சந்திக்கலாம். ஜாதகருக்கு தன்னுடைய தகப்பன...