முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தனுசு லக்கினம்: 7ஆம் அதிபதி 8ல்

தனுசு லக்னம் 7-ஆம் அதிபதி புதன், 8-ல் சூரியனுடன் இணைந்து உள்ளது, மணமகனுக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா? தனுசு லக்கினம்: கணவன் மாமியார் உறவு  தனுசு லக்கினத்திற்கு புதன் 7ஆம் வீடு மற்றும் 10ஆம் வீட்டிற்கு அதிபதி ஆவார். 7ஆம் வீடு மாரக ஸ்தானம் ஆகும். 10ஆம் வீடு கெடுதலான ஸ்தானம் இல்லை. ஆக, புதன் தனுசு லக்கினத்திற்கு ஒரு பாதி நன்மை செய்பவராகவும் மறு பாதி தீமை செய்பவராகவும் இருப்பார். பாக்கியாதிபதி சூரியன் 9ஆம் வீட்டின் அதிபதி என்பதால் ஒரு முழு சுபர் ஆவார். ஆக, சுபரான சூரியனும் பாதி அசுபரான புதனும் 8ஆம் வீடு என்ற துர் ஸ்தானத்தில் மறைந்து உள்ளனர். பாதி அசுபரான புதன் கெடுதலான 8ஆம் வீட்டில் மறைவதால் தன்னுடைய கெடுதல் பலனை மேலும் அதிகம் ஆக்குவார். சுபரான சூரியன் தன்னுடைய சுப தன்மையை இழந்து விடுவார். சூரியன் மற்றும் புதன் தனுசு லக்கினத்திற்கு 8ஆம் வீட்டில் மறைவதால் கீழே கண்ட பிரச்சினைகள் எழலாம். ஜாதகரின் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். கணவன்/மனைவி மற்றும் மாமியாருடன் உறவுகள் பின்னடைவை சந்திக்கும் அல்லது கணவன்/மனைவி மற்றும் மாமியார் சிரமத்தினை சந்திக்கலாம். ஜாதகருக்கு தன்னுடைய தகப்பன...
சமீபத்திய இடுகைகள்

8ல் செவ்வாய் இருந்தால்

  8ல் செவ்வாய் இருப்பதனால் ஆயுளுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா?  ஆயுள் ஜோதிடம்: 8ல் செவ்வாய்  8ல் செவ்வாய் இருந்தால் ஆயுளுக்கு பாதிப்பு என்பது ஜோதிடத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது (அல்லது) மூட நம்பிக்கை உள்ளது. முதலில் ஆயுளை ஜோதிடம் மூலம் கணக்கீடு செய்வோம். ஒரு ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது பூர்வ ஜென்ம கர்மாவினால் வரக்கூடிய பிரச்சினைகளை கூறும். அதாவது, ஒருவர் வாழும் காலத்தில் அந்த நபர் சந்திக்க வேண்டிய கஷடங்கள், எந்த மாதிரியான பிரச்சினைகள், எந்த காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும் மற்றும் அதன் பாதிப்பு எவ்வாறாக இருக்கும் என்பதனை குறிக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு மனிதன் தன்னுடைய கர்மாவினால் ஏற்படும் துன்பத்தினை அனுபவித்து முடிக்காமல், இந்த உலகத்தில் இருந்து போக முடியாது. அதாவது, 8ம் இடம் பலமாக இருந்தால் அதிக நாள் வாழ வேண்டும் (அதாவது, அதிக நாள் துன்பப்பட வேண்டும்). இப்பொழுது 8ம் இடம் என்பது, ஒருவருடைய ஆயுள் பலத்தை குறிக்கும் (அதாவது) மரணத்தை குறிக்காது. ஜோதிடத்தில், நீண்ட ஆயுள் உள்ளதா என்பதனை 8ம் இடத்தினை மட்டும் வைத்து சொல்ல முடியாது. ஒருவருக்கு ஆயுள் பற்றி அறிய, ஜாதகத...

திருமணம் எப்போது நடக்கும்?

12/09/1991 ஆவணி 27 வியாழன் பகல் 11.50 துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் முதுகுளத்தூர் - காளிதாஸ். திருமணம் எப்போது நடக்கும்? குடும்ப வாழ்வு எப்படி இருக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்?  நட்சத்திரம்:  ஸ்வாதி 3 சந்திர ராசி:  துலாம் லக்கினம்:  விருச்சிகம் சூரிய ராசி:  சிம்மம் முதலில் ஜாதகரின் ஜாதகம் (தலை எழுத்து) சொல்வது என்ன? ஜாதகரின் குடும்ப வாழ்வு எப்படி இருக்கும்என்று பார்க்கலாம். குடும்ப உறவு:  பெரிய குடும்பம்; குடும்பத்துடன் உறுதியான உறவு இருக்கும். ஆனால், சில காலங்களில், குடும்ப வாழ்வு கசந்து போய் விடும் (அல்லது) குடும்பத்துடன் நெருங்கிய உறவும், தனிமையும் ஏற்பட்டு விடும் (அல்லது) குடும்பத்தால் நன்மையையும் கஷ்டங்களும் ஏற்படும் (அல்லது) குடும்ப வாழ்வில் நன்மையையும் தீமையும் சரிசமாக நடக்கும். வாழ்கை துணை உறவு:  வலுவான துணை உண்டாகும் (அல்லது) வாழ்க்கை துணையுடன் வலுவான உறவு நீடிக்கும். ஆனால், வாழ்க்கை துணையுடன் உள்ள உறவில் சந்தோசம் மற்றும் கஷ்டங்கள் கலந்து காணப்படும். ——————————————————————————————————————— இப்பொழுது, நேரம் எப்படி இருக்கிறது என்று பார்ப்...